இலங்கையின் இலத்திரனியல் வணிக வளர்ச்சியில் Daraz முன்னணியில்

இலங்கையின் இலத்திரனியல் வணிக வளர்ச்சியில் Daraz முன்னணியில்-Daraz Leads in Growing Sri Lanka’s E-commerce Together with Local Sellers

Kaymu.lk இடமிருந்து கையேற்கப்பட்ட சுமார் நான்கு வருட குறுகிய காலத்தில் 35,000 க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்துள்ளமையை Daraz மிகவும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறது. Daraz ஊடாக நேரடி வர்த்தகங்கள் மாத்திரமன்றி, பல்வேறு வர்த்தக சலுகைகள், தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மக்களின் ஷொப்பிங் அனுபவத்தைத் தரமுயர்த்துவதில் எப்போதும் கவனம் செலுத்தி வரும் Daraz, தமது விற்பனையாளர்கள் மீதும் அதிக கவனம் செலுத்தி, தொழில்நுட்ப மற்றும் ஏனைய உதவிகளையும் பெற்றுக் கொடுத்து, பயிற்சிகள் என்பனவற்றின் மூலமாகவும், உற்பத்திகள் மற்றும் சேவைகளின் தரங்களை சகல பிரிவுகளிலும் சிறந்த முறையில் பெற்றுக்கொடுக்கவும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

தமது பங்காளிகளுக்கு சிறந்த பலன்களைப் பெற்றுக்கொடுக்கும் வாய்ப்புகள் பற்றி Daraz எப்போதும் அவதானம் செலுத்தி வருகிறது. இலங்கையின் மிகப் பெரிய ஒன்லைன் தளத்தின் வளர்ச்சியில் Daraz இன் விற்பனையாளர்கள் மிகப்பெரிய பங்கினை ஆற்றி வருகின்றனர். ஒன்லைன் விற்பனைத் தளம் என்ற ரீதியில் Daraz தொழில்நுட்பம் மற்றும் அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக்கொடுத்தாலும் கூட, உண்மையிலேயே விற்பனை மேற்கொள்வது விற்பனையாளர்களேயாவர்.

Daraz உடன் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் இணைந்து கொண்ட Skyle Gadget Shop நிறுவனமானது, அப்போது ஒரு நாளைக்கு 05 பொருட்களை மாத்திரமே விற்பனை செய்தது. எனினும், இப்போது நாளாந்தம் 200 க்கும் மேற்பட்ட பொருட்களை விநியோகித்து வருகிறது என்று அதன் உரிமையாளரான கிஹான் தெரிவித்துள்ளார். Skyle Gadget Shop நிறுவனம், நவநாகரீக உற்பத்திகள், இலத்திரனியல் உபகரணங்கள், கையடக்கத் தொலைபேசிகள் உட்பட மேலும் பல தயாரிப்புக்களை விற்பனை செய்கிறது. Daraz இனால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் மற்றும் சந்தைப்படுத்;தல் வழிமுறைகள் காரணமாக, இலங்கையின் உள்நாட்டு விற்பனையாளர்களுக்கு மிகச் சிறந்த விற்பனைப் பொறிமுறையாக இது செயற்பட்டு வந்துள்ளது.

கிஹான் தமது வர்த்தகத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்து 06 பேருக்கு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்துள்ளார். Daraz இன் வர்த்தக அபிவிருத்திகளினால் ஏற்பட்ட வளர்ச்சியில் தொழில் வாய்ப்புக்கள் உருவாவதை அவர் நன்கு தெளிவுபடுத்தியுள்ளார். தனக்கு வர்த்தக தளம் ஒன்றைப் பராமரிக்க வேண்டிய தேவைப்பாடு இல்லை என்பதனால், இந்தக் குழு எப்போதும் வேலை செய்யத் தயாராக, நெகிழ்வான முறையில் அதேவேளை, செயற்திறன் மிக்க முறையில் தமது தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்தரப்பட்ட நவநாகரீக ஆடைகள் விற்பனை நிறுவனம் ஒன்றான இன்டி பெஷன்ஸ், Daraz நிறுவனத்துடன் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் இணைந்து கொண்டது. பல்வேறு விதமான ஆடை வகைகள், ஜம்ப் சூட்டுகள் (Jumpsuits), நீள காற்சட்டைகள் மற்றும் மகளிருக்கான பல்வேறு விதமான நவ நாகரீக ஆடம்பர ஆடைகள் என்பனவற்றை விற்பனை செய்து வரும் இந்த நிறுவனம், தங்களுக்கென வர்த்தக நிலையம் ஒன்றைப் பராமரிக்க வேண்டிய தேவை இல்லை என்பதனால், இலத்திரனியல் வணிகத் துறையில் வளர்ச்சிக்குரிய ஏற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். இதன் உரிமையாளரான டிலானி, பல வருடங்களாக ஆடை விற்பனைத் துறையில் ஈடுபட்டு வந்துள்ளார். எவ்வாறாயினும், அவரது வியாபாரத்தில் அதிகளவு செயற்திறன், அதிக காசுப் பாய்ச்சல் மற்றும் இருப்புகளின் முழுமையான உரிமை என்பனவற்றின் தமக்குக் கிடைத்துள்ளமையை இதன் மூலம் அவர் நன்கு உணர்ந்துள்ளார். இன்டி பெஷன்ஸ் நிறுவனம், மாதம் ஒன்றுக்கு 300 க்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

கிஹான் மற்றும் டிலானி ஆகியோர் Daraz உடன் வளர்ச்சியடைந்த வர்த்தகர்களுக்கு சில உதாரணங்களாவார்கள். இலங்கையில் இலத்திரனியல் வணிகத் துறையில் வளர்ச்சி அடைவதற்கு நிறுவனத்தின் அளவோ, வியாபாரத்தின் அளவோ காரணம் அல்ல என்பதையும், உள்நாட்டு வர்த்தகங்கள் வளர்ச்சியடைவதற்கு போதியளவு வாய்ப்புகள் உள்ளன என்பதையும் உறுதிப்படுத்துவதற்கு இவர்களின் முயற்சி சிறந்ததொரு உதாரணமாகும்.


Add new comment

Or log in with...