ஊர்காவற்றுறையில் மாற்றுத்திறனாளியின் சடலம் மீட்பு | தினகரன்

ஊர்காவற்றுறையில் மாற்றுத்திறனாளியின் சடலம் மீட்பு

யாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இருந்து மாற்றுத்திறனாளியான ஆண் ஒருவரின் சடலம் இன்று (28) மதியம் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், இரண்டாம் பண்ணை வீதி ஊர்காவற்துறையைச் சேர்ந்த பிரான்சிஸ் அன்ரனி (58) என பொலிசார் தெரிவித்தனர்.

ஊர்காவற்றுறை பகுதியில்  தனித்து வாழ்ந்து வந்த இவர் இரவில் படகின் முகப்பில் உறங்குவதாக, பொலிசார் தெரிவித்தனர். அவ்வாறு உறக்கத்திலிருந்தபோது அவர் தவறி விழுந்திருக்கலாம் என, பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(நாகர்கோவில் விசேட நிருபர் - ஜெகதிஸ் சிவம்)


Add new comment

Or log in with...