மழை: கிழக்கு, ஊவா, வடமத்தி; முல்லைத்தீவு, வவுனியா | தினகரன்

மழை: கிழக்கு, ஊவா, வடமத்தி; முல்லைத்தீவு, வவுனியா

மழை: கிழக்கு, ஊவா, வடமத்தி; முல்லைத்தீவு, வவுனியா-Weather Sri Lanka-Rain-Ampara-Trincomalee

- திருகோணமலை, அம்பாறை, ஊவாவில் கனமழை

கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இப்பிரதேசங்களில் சில இடங்களில், குறிப்பாக ஊவா மாகாணத்திலும் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலும் 50 மி.மீ. க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்  வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


Add new comment

Or log in with...