மோட்டார் சைக்கிள் - கார் விபத்து; ஒருவர் பலி | தினகரன்

மோட்டார் சைக்கிள் - கார் விபத்து; ஒருவர் பலி

அகலவத்தை, தாபிலிகொடை  பகுதியில் நேற்றிரவு (26) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளும் காரும் மோதி விபத்திற்குள்ளானதாகவும் இதில் மத்துகமை, ஆந்தாவலை பகுதியில் வசிக்கும் துடுகல முதியன்சலாகே குமுது பத்மநாத் என்பவரே உயிரிழந்துள்ளார்.

பதுரெலிய பகுதியில் இருந்து அகலவத்தை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்த்திசையில் இருந்து வந்த காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததுடன்,  விபத்தில் காயமடைந்த கார் சாரதியும் வேத்தேவ   வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அகலவத்தை பொலிஸ் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(களுத்துறை சுழற்சி நிருபர் - நரேன் ஜயரட்னம்)


Add new comment

Or log in with...