லிந்துலையில் உயிரிழந்த சிறுத்தை மீட்பு

தலவாக்கலை, டயகம பிரதான வீதியில் லிந்துலை நாகசேனை பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையொன்று இன்று (27) காலை மீட்கப்பட்டுள்ளதாக, லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் பயணித்த வாகனம் ஒன்றில் மோதுண்டு குறித்த சிறுத்தை உயிரிழந்திருக்கலாம் என, பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சிறுத்தையின் உடலை மேலதிக விசாரணைகளுக்காக வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்க, லிந்துலை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

(தலவாக்கலை குறூப் நிருபர் - பி. கேதீஸ்)


Add new comment

Or log in with...