பலாங்கொடையில் பல்கலைக்கழக மாணவன் ஆற்றில் மூழ்கி பலி | தினகரன்

பலாங்கொடையில் பல்கலைக்கழக மாணவன் ஆற்றில் மூழ்கி பலி

பலாங்கொடையில் பல்கலைக்கழக மாணவன் ஆற்றில் மூழ்கி பலி-Youth Drown to Death-Balangoda-Atha Watunu Wala River

பலாங்கொடை, பின்னவலை, எத்தா வெட்டுனு எல ஆற்றில் இளைஞர்களுடன் நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

பலாங்கொடை, கலஹிட்டிகம பிரதேசத்தில் வசிக்கும் மேகமனுஜய என்ற 23 வயதுடைய  பேராதெனிய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

நண்பர்கள் பலருடன் நேற்று (26) மாலை ஆற்றில் குளிக்க சென்றிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

மரணம் குறித்த பிரேதப் பரிசோதனையும் மரண விசாரணையும் நடைபெற இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.

மரணமடைந்த பல்கலைக்கழக மாணவனின் சடலம் பலாங்கொடை அரச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர் - ஏ.ஏ.எம். பாயிஸ்)


Add new comment

Or log in with...