இரத்தினபுரியில் ஒரே நாளில் 4 கொரோனா நோயாளர்கள்

இரத்தினபுரியில் ஒரே நாளில் 4 கொரோனா நோயாளர்கள்-4 Cases Identified in Ratnapura Police Area

- ஒரே குடும்பத்தில் தந்தை மற்றும்  2 குழந்தைகளுக்கு கொரோனா
- பல கிராமங்கள் வீதிகள் முடக்கம்

இரத்தினபுரி பொலீஸ் அதிகாரப் பிரதேசத்தில் ஒரே தினத்தில் மாத்திர ம் நான்கு நோயாளர்கள் கண்டு பிடி க்கப்பட்டதையடுத்து இப்பிரதேசத் தின் பல கிராமங்கள் வீதிகள், சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறையின் உத்தரவுகளுக்ககு இணங்க இன்று (26) முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளன.

பேலியகொடை மீன் சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய இரத்தினபுரி மல்வல எம்புல்தெனிய கிராமத்தின் நபர் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாகவும் இதே போன்று எஹலியகொடை பிரதேச  நபர் ஒருவருக்கும் இத்தொற்று உள்ளதாகவும்  இப்பிரதேசங்களின் பொதுச் சுகாதார அதிகாரி காரியாலயங்கள் இன்று (26) இதனை உறுதிப்படுத்தின.

இதனையடுத்து இரத்தினபுரி பொலிஸ் அதிகார பிரதேசத்தின் எகொட ஸ்ரீபாகம, உதுரு கிலீமல, தகுனு கிலீமல, கெட்டவல, மாபலான ஆகிய  கிராமங்கள்  முடக்கப்பட்டன.

மேலும் இன்று (26) காலை முதல் குருவிட்ட ஹேனெகம - ஓலுகல வீதி, குருவிட்ட - ரத்துருகல ஆகிய வீடுகளும் அவற்றில் உள்ளடக்கப்படும் சில கிராம பகுதிகளும் காலவரையறையின்றி முடக்கப்பட்டுள்ளன.

மேற்படி கிராமங்களும் விதிகளும் கொரோ னா அச்சுறுத்தல் காரணமாக ஒதுக் கப்பட்டுள்ள நிலையில் ஏனைய கி ராமங்கள் நகரங்களின் மக்கள்வை த்திய அறிவுறுத்தல்களை முழுமை யாக பேணுவதன் மூலம் தத்தமதுபி ரதேசங்கள் முடக்கப்படும் அச்சுறுத் தலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என பொதுச் சகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர் - ஏ.ஏ.எம். பாயிஸ்)


Add new comment

Or log in with...