ஓட்டமாவடியில் டெங்கினால் பெண் மரணம் | தினகரன்

ஓட்டமாவடியில் டெங்கினால் பெண் மரணம்

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்கு நோயினால் பெண்ணொருவர் இன்று (26) உயிரிழந்துள்ளதாக, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி, டாக்டர் எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.

ஓட்டமாவடி ஜும்ஆ பள்ளிவாசல் வீதி மூன்றாம் குறுக்கில் வசிக்கும் 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை 211 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், டெங்கு நோயினால் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி, டாக்டர் எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.

இதேவேளை, டெங்கு நோய் பரவும் வகையில் நீர்த்தாங்கி மற்றும் கழிவுகளை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், இதற்கு பிறகு இவ்வாறு சுத்தம் இல்லாமல் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

(கல்குடா தினகரன் நிருபர் - எஸ்.எம்.எம். முர்ஷித்)


Add new comment

Or log in with...