பாராளுமன்றம் இரு நாட்களுக்கு பூட்டு | தினகரன்

பாராளுமன்றம் இரு நாட்களுக்கு பூட்டு

பாராளுமன்றம் இரு நாட்களுக்கு பூட்டு-Sri Lanka Parliament Closed for 2 Days-COVID19SL

ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாராளுமன்ற வளாகம் இன்றும் (26) நாளையும் (27) மூடப்படும் என பிரதி பொதுச்செயலாளர் நாயகம் மற்றும் பணிக்குழாம் பிரதானி நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அனைத்து ஊழியர்களும் இன்றும் (26) நாளையும் (27) பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூடப்பட்ட இரண்டு நாட்களுக்குள் முழு நாடாளுமன்ற கட்டம் மற்றும் வளாகமும் கிருமி நீக்கம் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் புதன்கிழமை (28) ஊழியர்களுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது.


Add new comment

Or log in with...