நாடு முழுவதும் முடக்க நிலையென வதந்திகள், போலிப் பிரசாரங்கள் | தினகரன்

நாடு முழுவதும் முடக்க நிலையென வதந்திகள், போலிப் பிரசாரங்கள்

நம்பவேண்டாம் என்கிறார் பொலிஸ் பேச்சாளர்

நாடு முழுவதும் முழுமையாக முடக்கப்படுமென சிலர் போலிப் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். அவ்வாறு நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்பவில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தற்போது 50 பொலிஸ் பிரிவுகளில் மட்டுமே அமுற்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர், ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள பிரதேசங்களில் வசிக்கும் மக்களை வீடுகளில் தங்கியிருக்குமாறு கேட்டுக்கொண்டார். 

இதேவேளை, ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படாத பகுதிகளில் உள்ள மக்களும் அவசியமற்ற பிரயாணங்களைத் தவிர்த்து வீடுகளில் தங்கியிருக்குமாறும் பொலிஸ் ஊடகச் பேச்சாளர் கேட்டுக்கொண்டார். 


Add new comment

Or log in with...