மீன்களை கையாண்ட பின் கைகளை கழுவவும் | தினகரன்

மீன்களை கையாண்ட பின் கைகளை கழுவவும்

மீன்களை கையாண்ட பின் கைகளை கழுவவும்-Fish Related COVID19 Health Advice-Health Ministry

- நன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது
- கையாளும்போது முகத்தை தொடுவதை தவிர்க்கவும்

நன்கு சமைத்த மீன்‌ ஊடாக கொரொனா பரவாது என்ற விஞ்ஞானபூர்வமான ஆதாரத்தினை மீண்டும்‌ வலியுறுத்துவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளை, கோட்பாட்டு அடிப்படையில்‌ எந்தவொரு மேற்பரப்பிலும்‌ கொரனா காணப்படலாம்‌ என்பதால்‌ சமைப்பதற்கு மீனைத்‌ தயாரிக்கும்‌ போது அல்லது மீனை சேமிப்பதற்காக தயார்படுத்தும் போது முகத்தை‌ கைகளால்‌ தொடுவதை தவிர்ப்பதுடன்‌ சமையல்‌ பாத்திரங்கள்‌ மற்றும்‌ கரங்களை நன்கு கழுவிக்கொள்ள வேண்டும்‌ எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும்‌ அடிப்படையற்ற விதத்தில்‌ மீன்‌ சந்தைகளை மூடுவது அனாவசியமாகும்‌ ஆகையால்‌ பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நெறிமுறைகளான முகக்கவசம்‌ அணிதல்‌, சமூக இடைவெளியினைப்‌ பின்பற்றுதல்‌ மற்றும்‌ கைகளை சவர்க்காரமிட்டு நன்கு கழுவுதல்‌ ஆகியவற்றை இறுக்கமாகப்‌ பின்பற்றி மீன்‌ சந்தைகளை தொடர்ந்து நடத்தலாம்‌ என, சுகாதார அமைச்சினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

PDF File: 

Add new comment

Or log in with...