கிழக்கு, ஊவா, வடமத்தி; முல்லை, வவுனியாவில் பிற்பகலில் மழை

கிழக்கு, ஊவா, வடமத்தி; முல்லை, வவுனியாவில் பிற்பகலில் மழை-Weather Forecast Sri Lanka-Evening Rain

கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, குருணாகல், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...