வவுனியா வைரவபுளியங்குள விபத்தில் இளைஞர் படுகாயம்

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில்  ஹன்டர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளானதில், இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (24) காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வவுனியா வைரவர் கோவில் வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த ஹன்டர் வாகனமானது, வைரவர் கோவில் வீதி, முதலாம் ஒழுங்கைக்கு திரும்ப முற்பட்டபோது, அப்பாதையூடாக வந்த மோட்டார் சைக்கிளுடன்  மோதுண்டு,  அருகேயிருந்த மின்கம்பத்திலும் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி 22 வயதுடைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(வவுனியா விசேட நிருபர் - கே.வசந்தரூபன்)


Add new comment

Or log in with...