கொவிட் 19க்கு பின்னரான வாழ்க்கை முறைக்கு வேலைத் திட்டம் அவசியம் | தினகரன்

கொவிட் 19க்கு பின்னரான வாழ்க்கை முறைக்கு வேலைத் திட்டம் அவசியம்

கொவிட் வைரஸுடன் வாழும் தீர்மானங்களை அரசாங்கம் எடுத்துள்ளதால் எமது பாரம்பரிய வாழ்க்கைமுறையிலிருந்து நாம் முழுமையாக மாற்றமடையும் கொவிட்டுக்கு பின்னரான வாழ்க்கைமுறையொன்றுக்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கொவிட் வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடிகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

கொவிட் 19 வைரஸ் முதலாம் அலையைவிட இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது.

இதனால் சமூகத்தில் பாதுகாப்பற்ற தன்மையும் பீதியும் ஏற்பட்டுள்ளது. சாதாரண மக்களும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் நிலை காணப்படுகிறது. இதனால் மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொவிட் ஒழிப்பு நடவடிக்கையில் நேரடியாக பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்துள்ளனர்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...