தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து அரவிந்தகுமார் எம்.பி இடைநிறுத்தம் | தினகரன்

தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து அரவிந்தகுமார் எம்.பி இடைநிறுத்தம்

மலையக மக்கள் முன்னணியும் ஆராய்கிறதாம்

20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரை தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக கட்சியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார். மனோ கணேசன் இதனை தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

“அரவிந்தகுமார் எம்பியை தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளேன். த. மு. கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு இது தொடர்பில் ஆராயும். அடுதையடுத்து, அரசியல் குழு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் அரவிந்தகுமார் எம்பி, த.மு.கூ-யிலிருந்து விலக்கப்படுவார்.

அரவிந்தகுமார் தொடர்பான மேலதிக நடவடிக்கையை எடுக்குமாறு அவரது கட்சியான மலையக மக்கள் முன்னணியிடமும் கேட்டுக் கொள்ளப்படும்” என்றும் அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினரான ஏ. அரவிந்தகுமார் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கியமை, கட்சியினதோ, தமிழ் முற்போக்கு கூட்டணியினதோ முடிவல்ல என ராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஹட்டனில் கூடவுள்ள மலையக மக்கள் முன்னணியின் மத்தியகுழு கூட்டத்தில் அது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வேலுசாமி ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டிருந்தார்.


Add new comment

Or log in with...