அமெரிக்க வெளியுறவு செயலாளர் விஜயம் | தினகரன்

அமெரிக்க வெளியுறவு செயலாளர் விஜயம்

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பொம்பியோ எதிர்வரும் நாட்களில் இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா மற்றும் மாலைதீவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி மைக் பொம்கியோ இலங்கை உட்பட நான்கு நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை நாளை மறுதினம் 25 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை முன்னெடுப்பாரென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கை வரும் மைக் பொம்பியோ எதிர்வரும் 28 ஆம் திகதி கொழும்பில இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்காவிலுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...