விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கம் குறித்து மேன்முறையீடு | தினகரன்

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கம் குறித்து மேன்முறையீடு

இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்ைக

பிரிட்டனில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேன்முறையீட்டு ஆணையம் [Proscribed Organizations Appeal Commission, POAC] தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாக நேற்று முன்தினம் (ஒக்ேடாபர் 21) வழங்கியுள்ள பகிரங்கத் தீர்ப்பு குறித்து இலங்கை அரசாங்கத்திற்குத் தெரிய வந்துள்ளது.

பிரிட்டனில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலிலிருந்து புலிகள் இயக்கத்தை நீக்க வேண்டும் என்று அவ்வியக்கத்திற்குச் சார்பான தரப்பினரின் கோரிக்ைகயை நிராகரித்து பிரிட்டனின் உள்துறை அமைச்சகத்தின் இராஜாங்கச் செயலாளர் கடந்த 2019 மார்ச் மாதம் 08ஆம் திகதி வழங்கிய தீர்ப்பை சவாலுக்குட்படுத்தி, 2019 மே மாதம் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் அடிப்படையில் 'பிஓஏசி' யின் தீர்ப்பு அமைந்துள்ளது.

 'பிஓஏசி' இன் இந்த நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒரு தரப்பாக இல்லாததால், நேரடி பிரதிநிதித்துவங்களைச் செய்ய முடியவில்லை என்றாலும், புலிகள் இயக்கத்தின் தொடர்ச்சியான பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து உரிய தகவல்களை வழங்கியதன் மூலம் பிரிட்டன் அரசுக்கு இலங்கை அரசாங்கம் உதவியுள்ளது. மேன்முறையீட்டை அனுமதிக்கும் போது POAC இன் பகிரங்கத் தீர்ப்பானது மேலதிக விசாரணைகளுக்கும் வாய்ப்பளித்துள்ளது.மேலும் இலங்கை அரசு, பிரிட்டன் வழக்கின் முன்னேற்றத்தை உன்னிப்பாக கண்காணிக்கும் என்று வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்ைகயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...