விஜயதசமி, வித்தியாரம்பம் ஏடு தொடக்குதல் 26 இல்! | தினகரன்

விஜயதசமி, வித்தியாரம்பம் ஏடு தொடக்குதல் 26 இல்!

திங்களே உன்னதமானது என்கிறார் ஐயப்பதாச குருக்கள்

வித்தியாரம்பம் செய்வதற்கு (ஏடு தொடக்குதல்) எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமையே சிறந்ததென சர்வதேச இந்துமத குருபீடாதிபதி அறிவித்துள்ளார்.

தசமியில் வித்யாரம்பம் செய்வது குழந்தைகளுக்கு நல்ல  ஞானத்தைக் கொடுக்கவல்லது. நாளை மறுதினம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி 16 நிமிடம் வரை நவமி திதி நிற்பதனால். நவமியில் வித்தியாரம்பம் செய்யக்கூடாது. எனவே. 26ஆம் திகதி திங்கட்கிழமை தசமியிலேயே வித்யாரம்பம் செய்யவேண்டும். அட்டமி மற்றும் நவமி திதியில் அறிவுபூர்வமாக சிந்திப்பவர்கள் சுப காரியங்கள் எதையுமே ஆரம்பிக்கமாட்டார்கள்.எனவே 26.10.2020. திங்கள் காலை 9.மணி 3 நிமிடத்திற்க்கு மேல். 10.மணி 15.நிமிடத்திற்குள். குழந்தைகளுக்கு வித்யாரம்பம் எனும் ஏடு தொடக்கல் வெற்றியைத்தரும்.


Add new comment

Or log in with...