ஜனாதிபதி மீது அசைக்க முடியாத நம்பிக்கை; 20ஐ ஆதரிக்க அதுவே பிரதான காரணம் | தினகரன்

ஜனாதிபதி மீது அசைக்க முடியாத நம்பிக்கை; 20ஐ ஆதரிக்க அதுவே பிரதான காரணம்

பாராளுமன்றத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தமிழ் மக்களின் அபிலாசைகளை பாதுகாக்கும் வகையில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் அமையும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் 20 ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன் சகோதர முஸ்லிம் மக்களின் காய்கறி நறுக்கும் கத்திகள்கூட பயங்கரவாத ஆயுதங்களாக சித்தரிக்கும் சூழலை எற்படுத்திய 19 ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற அவசியத்தின் அடிப்படையிலும் இதனை ஆதரிப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (22) நடைபெற்ற 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கடற்றொழில் அமைச்சர் இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

20ஆவது திருத்தச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு மிகவும் ஆபத்தானதென்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த நாட்டில் ஜனாதிபதியின் கரங்களில் நிறைவேற்று அதிகாரம் இருந்த காலப் பகுதியைவிட, ஏனைய காலப் பகுதியிலேயே அதிகளவில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தமையை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட அதிகார குழப்பங்கள் காரணமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான சூழல் ஏற்பட்டதையும் அதன் காரணமாக சகோதர முஸ்லிம்களின் வாழ்வியலும் பொருளாதாரமும் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியமையையும் சுட்டிக்காட்டினார்.

 


Add new comment

Or log in with...