இஸ்ரேல் போர் விமானங்கள் காசாவில் சரமாரித் தாக்குதல் | தினகரன்

இஸ்ரேல் போர் விமானங்கள் காசாவில் சரமாரித் தாக்குதல்

முற்றுகையில் உள்ள காசா பகுதியில் ஹமாஸ் இலக்குகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் வான் தாக்குதலை நடத்தியுள்ளன.

பலஸ்தீன ஹமாஸ் குழுவுக்கு சொந்தமான சுரங்கப் பாதைகளை இலக்கு வைத்து கடந்த செவ்வாய் இரவு இந்த வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கான் யூனிஸ் மற்றும் டெயிர் அல் பலாஹ்வில் இரு விவசாய நிலங்கள் மீதே மூன்று ஏவுகணைகள் விழுந்ததாக அதனைப் பார்த்த பலஸ்தீனர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கான் யூனிஸ் பகுதியில் இருந்து வீசப்பட்ட ரொக்கெட் குண்டு ஒன்றை இடைமறித்ததாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

இந்த இரண்டு தாக்குதல் சம்பவங்களில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த விபரமும் வெளியாகவில்லை.

காசாவின் அனைத்து தேவையான வர்த்தகப் பொருட்களும் சுரங்கப் பாதை ஊடாகவே எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...