புனித பூமியில் புதையல் தோண்டிய 8 பேர் கைது | தினகரன்

புனித பூமியில் புதையல் தோண்டிய 8 பேர் கைது

பலாங்கொடை, கல்தோட்டை பொலிஸ் பிரிவின் புதுகல புனித பூமி பிரதேசத்தில் புதையல் தோண்டிய 8 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கல்தோட்டை பொலிஸாருக்கு கிடை த்த இரகசிய தகவலையடுத்து இவர்கள் அனைவரும் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பிரதான சந்தேகநபர் பலாங்கொடை, வெலிபத்தயாய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் ஏனையவர்கள் அனைவரும் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் திஸ்ஸமகாராம பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் பூஜைப் பொருட்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. கல்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தரங்க ஹபுகஸ்வத்த தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)


Add new comment

Or log in with...