நிந்தவூர் பிரதேசத்தில் அபிவிருத்தி பணிகள் | தினகரன்

நிந்தவூர் பிரதேசத்தில் அபிவிருத்தி பணிகள்

உபதவிசாளர் சுலைமாலெப்பை நடவடிக்ைக

கடந்த 2018ம் ஆண்டு நிந்தவூர் பிரதேச சபைக்காக நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று உபதவிசாளர் வை. எச். சுலைமாலெப்பை கடந்த இரண்டு வருட காலமாக பணியாற்றி வருகின்றார்.

அவரது முயற்சியின் ஒரு அம்சமாக நிந்தவூர் பிரதேச விவசாயிகள் நன்மை கருதி பெரியபாலத்திற்கு அருகிலுள்ள அணைக்கட்டுக்கான மின்சார வசதி அமைச்சர் மஹிந்த அமரவீரவின் உதவியுடன் சுமார் 30 இலட்சம் ரூபா செலவில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மற்றொரு அபிவிருத்தியாக அல்மூலை சந்தியில் இருந்து மானாம்வட்டை வரையும் சுமார் 1 கோடி ரூபா நிதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வீதி அபிவிருத்திப் பணிகள் நடைபெற்றுள்ளன.

இவரது பதவிக் காலத்தில் மாகாண சபை யின் ஊடாகவும், மத்திய அரசாங்கத்தினூடாகவும் பல அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் பணிப்பின் பேரில் கிராம பாதைகள் அபிவிருத்திக்கு 1 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமிய பாதைகளை அழகுபடுத்தும் வகையில் 20 இலட்சம் ரூபா வழங்கி அதற்கான வேலைகள் முடிவடைந்துள்ளன.

அமைச்சர் ஜனக பண்டாரதென்னக்கோன் விளையாட்டு மைதானத்துக்கு தேவையான மலசலகூட வசதிகளுக்கு சுமார் 20 இலட்சம் ரூபா வழங்குமாறு தனது அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். நிந்தவூர் பிரதேச மீனவர்களின் தேவைகள் தொடர்பாக ஆராய உபதலைவர் சுலைமாலெவ்வை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அம்பாறை பிரதேசத்துக்கு நேரில் வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

அமைச்சர் கரையோர மற்றும் ஆழ்கடல் மீனவர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து மீன் வாடிகள் மற்றும் மீனவர்களுக்கு தேவையான மலசல கூடங்களுக்கு நிதியைப் பெற்று 2021 ஆம் ஆண்டில் வேலைகளை ஆரம்பிக்க நிதி ஒதுக்கியுள்ளார்.

"நிந்தவூர் பிரதேச மக்களின் கல்வி, விவசாயம், மீன்பிடி, சுகாதாரம் போன்ற தேவைகளுக்கான வசதிகளை எதிர்வரும் 2021ம் ஆண்டில் முடிந்தளவு நிறைவேற்றுவதற்கான கோரிக்ைகயை உரிய அமைச்சர்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாக சுலைமாலெவ்வை தெரிவித்தார்.

"எமது பிரதேசத்தில் முன்பள்ளி பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியைகள் இன்னும் 4 ஆயிரம் ரூபாவையே மாதாந்தக் கொடுப்பனவாகப் பெற்று வருகின்றனர். இவ்வாசிரியைகள் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதாக உப தவிசாளர் தெரிவித்தார். நிந்தவூர் பிரதேசத்துக்கு விஜயம் செய்த ஆளுநர், ஆசிரியைகளின் தேவைகளை அறிந்து எதிர்வரும் ஆண்டு முதல் கொடுப்பனவை அதிகரிப்பதாக உறுதியளித்தார்.

"நிந்தவூர் பிரதேசத்தில் கட்டி முடிக்கப்படாத கட்டடங்கள் அறைகுறையாகக் காணப்படுகின்றன. 2021ம் ஆண்டின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து நிந்தவூர் பிரதேசத்துக்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட எடுத்துக் கூறியுள்ளேன். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மஹிந்த அமரவீர, சந்திரசேன, ஜி. எல். பீரிஸ் ஆகியோரின் கவனத்துக்கு இதனைக் கொண்டு வந்துள்ளேன்.

அல்_அ‌ஷ்றக் தேசிய பாடசாலையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக அமைச்சர் ஜி. எல். பீரிஸின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதுடன், அமைச்சர் இப்பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி தளபாடங்கள், பாண்ட் வாத்தியக் கருவிகளை கொள்வனவு செய்ய அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இதன் அடிப்படையில் 20 இலட்சம் ரூபா கட்டட தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

"கொரோனா வைரஸ் தொற்றுநீக்கி தெளிகருவிகளை கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் லதாகரன், பிராந்திய சுகாதார பிரதிப் பணிப்பாளர் சுகுணன் ஆகியோரின் உதவியால் பெற்றுக் கொடுத்துள்ளேன். யானைகளின் அழிவை கட்டுப்படுத்தும் வகையில் பரபட்டபிட்டி தொடக்கம் வெல்லங்கட்டு வரை சூரியப் படல் மின்இணைப்புக்கான கோரிக்ைகயை அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஊடாக கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளரின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளேன்" என்று சுலைமாலெவ்வை மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...