20ஐ எதிர்த்து சிவப்பு நிற பட்டியுடன் எதிரணியினர் | தினகரன்

20ஐ எதிர்த்து சிவப்பு நிற பட்டியுடன் எதிரணியினர்

20ஆவது திருத்தச்சட்டம் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான அணியினர் அனைவரும் கையில் 20ஐ எதிர்ப்போம் என்கிற அடையாளமிடப்பட்ட சிவப்பு நிறப்பட்டி ஒன்றை கட்டியபடி சபைக்கு நேற்று வருகைதந்தனர்.

அத்துடன் பாராளுமன்றத்திற்கு வருகைதரும்முன் எதிரணியினர் வாகனப் பேரணியொன்றை பாராளுமன்ற வளாகத்தில் நடத்தினர். இதுவும் 20ஆவது திருத்த யோசனைக்கு எதிராக செயற்பாடாகவே நடத்தியதாக ஐக்கிய மக்கள் சக்தியினர் தெரிவித்தனர். 20 க்கு எதிர்ப்பு தெரிவித்து எதிரணி வாகன பேரணி

20ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று பாராளுமன்றத்தை நோக்கி வாகன எதிர்ப்பு பேரணியொன்றை நடத்தினர்.எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை நோக்கி நடத்திய இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.

 


Add new comment

Or log in with...