அலரி மாளிகையில் நவராத்திரி பூஜை | தினகரன்

அலரி மாளிகையில் நவராத்திரி பூஜை

நவராத்திரி பூஜை கொண்டாட்டங்களில் நான்காவது நாளான நேற்று (20) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் விசேட கொலுவைத்து பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

அலரி மாளிகையில்  நடைபெற்ற  நவராத்திரி பூஜை நிகழ்வுகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான  ஜீவன் தொண்டமான் கலந்துகொண்டார்.

இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் மற்றும் பிரதமரின் பெருந்தோட்டங்களுக்கான இணைப்புச்செயலாளரும் ஒருங்கிணைப்பாளருமான செந்தில் தொண்டமான் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர். 


Add new comment

Or log in with...