முழு கம்பஹா மாவட்டத்திற்கும் இரவு 10.00 மணி முதல் ஊரடங்கு

முழு கம்பஹா மாவட்டத்திற்கும் இரவு 10.00 மணி முதல் ஊரடங்கு-Quarantine Curfew From 10pm today to Monday 5am

நேற்றையதினம் 125 பேர் உள்ளிட்ட 513 பேர் இதுவரை கைது

முழு கம்பஹா மாவட்டத்திற்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று (21) இரவு 10.00 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (26) அதிகாலை 5.00 மணி வரை தொடர்ச்சியாக ஊரடங்கு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக, கொவிட்-19 எதிர்பாரா பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்திலுள்ள மினுவாங்கொடை மற்றம் திவுலபிட்டி பொலிஸ் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் கடந்த ஒக்டோபர் 04ஆம் திகதி முதல், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதோடு, அதனைத் தொடர்ந்து கம்பஹா மாவட்டத்தின 19 பொலிஸ் பிரிவுகளில் படிப்படியாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றையதினம் (20) குளியாபிட்டி பகுதியிலுள்ள 5 பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஊரடங்கை மீறிய 513 பேர் இதுவர கைது செய்யப்பட்டுள்ளதோடு, கடந்த 24 மணித்தியாலங்களில் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இது ஒரே நாளில் கம்பஹா மாவட்டத்தில் அதிகளவானோர் கைது செய்யப்பட்ட எண்ணிக்கையாகும். என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஊரடங்குச் சட்டத்தை மீறிய 63 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக அவர் தெரிவிதார்.


Add new comment

Or log in with...