மேலும் ஐந்து பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல் | தினகரன்

மேலும் ஐந்து பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா

குளியாப்பிட்டி பகுதிலுள்ள மேலும் 5 பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டிய, பன்னல, தும்மலசூரிய, கிரியுல்ல மற்றும் நாரம்மல பொலிஸ் பிரிவுகளுக்கே மறு அறிவித்தல் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நேற்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குளியாபிட்டிய பகுதியில் உள்ள மத ஸ்தலத்தில் தடையை மீறி சமய நிகழ்வில் கலந்து கொண்ட பலருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதகனகளின் பின்னர் அதில் பங்கேற்ற 14 பேர் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக குளியாபிட்டி சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் உட்பட குளியாபிட்டி மருத்துவ அலுவலக பகுதியில் மொத்தமாக கோவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 


Add new comment

Or log in with...