மத்திய மாகாண உதவி ஆசிரியர் நியமனம் 23இல் | தினகரன்

மத்திய மாகாண உதவி ஆசிரியர் நியமனம் 23இல்

ஜீவன் தொண்டமான் அறிவிப்பு

மத்திய மாகாண உதவி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வழங்கப்படுமென இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று அறிவித்துள்ளார்.

நீண்ட காலமாக மத்திய மாகாணத்தில் நிலவி வந்த உதவி ஆசிரியர் நியமனம் தொடர்பான பிரச்சினைகள் உதவி ஆசிரியர்களினால் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானிடமும் மத்திய மாகாண தமிழ் கல்வி ஒருங்கிணைப்பாளர் கணபதி கனகராஜிடமும் கோரிக்ைககள் முன்வைக்கப்பட்டிருந்தன. இக் கோரிக்கைகளின் விளைவாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், மத்திய மாகாண ஆளுநருடன் கடந்த மாத முற்பகுதியில் இது தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களின் நியமனங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வழங்கப்படுமென மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே நேற்று (20) காலை இராஜாங்க அமைச்சரிடம் தொலைபேசியூடாக அறிவித்துள்ளார்.

இதனையடுத்தே இராஜாங்க அமைச்சர் அந்த அறிவிப்பையும் நேற்று விடுத்துள்ளார்.

இதற்காண சகல நடவடிக்கைகளையும் வெகுவிரைவில் பூர்த்திசெய்யப்படுமெனவும் அவர் அறிவித்தார் .

 

 


Add new comment

Or log in with...