'800' திரைப்படத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகர் விஜய் சேதுபதி | தினகரன்

'800' திரைப்படத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகர் விஜய் சேதுபதி

 சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 800 படத்திலிருந்து விலகியதாக விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 800 திரைப்படத்திலிருந்து விலகிக்கொள்ளுமாறு விஜய் சேதுபதியை முத்தையா முரளிதரன் கேட்டுக்கொண்டிருந்தார்.

இதனையடுத்து அவரது அறிக்கையை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த விஜய் சேதுபதி, நன்றி வணக்கம் என பதிவிட்டிருந்தார இந்த நிலையில், சென்னையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விஜய்சேதுபதி, நன்றி வணக்கம் என்றால் எல்லாம் முடிந்து விட்டதாகவே அர்த்தமென தெரிவித்தார். அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...