ரிஷாட்டுக்கு பாராளுமன்றம் வர அனுமதிக்க வேண்டும் | தினகரன்

ரிஷாட்டுக்கு பாராளுமன்றம் வர அனுமதிக்க வேண்டும்

எதிரணி பிரதம கொரடா

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எம்.பிக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதி வழங்குமாறு எதிர்க்கட்சி பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று சபையில் கோரினார். பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் தலைமையில் கூடியது.

தினப் பணிகளை தொடர்ந்து ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்த லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி., ரிஷாட் பதியுதீன் எம்.பிக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க உரிமையுள்ளது. அதற்கு சபாநாயகர் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இது தொடர்பில் கோரிக்கை முன்வைக்குமாறு கோரினார்.

 ஷம்ஸ் பாஹிம், நிசாந்தன் சுப்பிரமணியம்


Add new comment

Or log in with...