பளை பிரதேசத்தில் கைக்குண்டுடன் மூவர் கைது | தினகரன்

பளை பிரதேசத்தில் கைக்குண்டுடன் மூவர் கைது

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் கைக்குண்டுடன் மூவர் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (18) ஏற்பட்ட கொடுக்கல், வாங்கல் காரணமாக இரு தரப்பினருக்கிடையில் முரண்பாடு ஏற்பபட்டுள்ளது. தொடர்ந்து எற்பட்ட  கைகலப்பு காரணமாக மோட்டார் சைக்கிளை ஒரு சாரார் அபகரித்துள்ளனர்.

இதன்போது பாதிக்கப்பட்டவர் நேற்று (19)  ஓர் கைக்குண்டினை காட்டி மோட்டார் சைக்கிளை தரும்படி மிரட்டிய நிலையில் சம்பவம் தொடர்பான தகவல் கிளிநொச்சி பளை பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சம்பவவிடத்துக்கு விரைந்த பொலிசார் சம்பந்தப்பட்ட கைக்குண்டை  வைத்திருந்த நபரை கைது செய்ததுடன் அச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

(நிபோஜன்)


Add new comment

Or log in with...