உடுவிலில் இராணுவத்தால் மற்றுமொரு வீட்டுக்கு அடிக்கல்‌ | தினகரன்

உடுவிலில் இராணுவத்தால் மற்றுமொரு வீட்டுக்கு அடிக்கல்‌

உடுவிலில் இராணுவத்தால் மற்றுமொரு வீட்டுக்கு அடிக்கல்‌-Foundation Stone For Low Income Family

யாழ்‌. பிரதேசத்தில்‌ வாழ்கின்ற குறைந்த வருமானத்தைப்‌ பெறுகின்ற குடும்பங்களிற்கு வீடுகள்‌ வழங்குகின்ற வேலைத்திட்டத்தின்‌ அடுத்ததோர்‌ இல்லத்தை அமைப்பதற்கு நன்கொடையாளர்‌ குமார வீரசூரிய மற்றும்‌ அவருடைய நண்பர்களுடைய பூரண நிதியனுசரணையில்‌ உடுவில்‌ பிரதேசத்தில்‌ வசிக்கும்‌ குறைந்த வருமானத்தினைப்‌ பெறுகின்ற டெசிந்ரா ரதீஸ்‌ குடூம்பத்தினருக்கு இராணுவத்தினரின்‌ சரீர பணியுடன்‌ நிர்மானிக்கப்படவுள்ள புதிய வீட்டிற்கான அடிக்கல்‌ நாட்டும்‌ வைபவம்‌ யாழ்‌. கட்டளைத்‌. தளபதி மேஜர்‌ ஜெனரல்‌ செனரத்‌ பண்டார அதிகாரி தலைமையில்‌ நேற்று (19) நடைபெற்றது.

இவ்‌வீட்டுத்திட்டமானது 51ஆவது கட்டளைத்‌ தலைமையகத்தின்‌ ஏற்பாட்டின்‌ கீழ்‌ 511ஆவது படைப்பிரிவின்‌ நெறிப்படுத்தலில்‌ 9ஆவது தரைப்‌ படையணியின்‌ சரீர ஒத்துழைபுடன்‌ அமைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காலத்தின்‌ தேவை கருதி அறிவுறுத்தப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக ஒழுங்கு செய்யபட்ட இந்த அடிக்கல்‌ நாட்டும்‌ நிகழ்விற்கு 51ஆவது கட்டளைத்‌ தலைமையகத்தின்‌ தளபதி, 511ஆவது படைப்பிரிவின்‌ படைத்தளபதி, நன்கொடையாளர்‌ குமார வீரசூரிய மற்றும்‌ அவருடைய நண்பர்கள்‌, இராணுவ உயரதிகாரிகள்‌, இராணுவ வீரர்கள்‌ உட்பட குறிப்பிட்ட அளவிலானோர்‌ கலந்து கொண்டிருந்தனர்‌.


Add new comment

Or log in with...