மேல், சப்ரகமுவ; காலி, மாத்தறையில் ஆங்காங்கே மழை | தினகரன்

மேல், சப்ரகமுவ; காலி, மாத்தறையில் ஆங்காங்கே மழை

மேல், சப்ரகமுவ; காலி, மாத்தறையில் ஆங்காங்கே மழை-Weather Forecast-Rain-Western-Sabaragamuwa-Galle-Matara

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் பல இடங்களில் குறிப்பாக காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, திணைக்களம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு, திருகோணமலை, மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...