கிளினிக் நோயாளர்களின் வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்க ஏற்பாடு

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை கிளினிக் நோயாளர்களின் வீடுகளுக்கு மருந்துகளை தபால் திணைக்களத்தினூடாக இன்று (20) முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஜே.எம். ஜவாஹிர் தெரிவித்தார்.
 
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட்-19 நோய்த் தொற்று காரணமாக கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகளை விநியோகிக்குமாறு சுகாதார அமைச்சினால் விடுத்துள்ள சுற்று நிரூபத்திற்கமைய மருந்து விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
 
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கிளினிக் பதிவு உள்ள நோயாளர்கள் 0672052068 மற்றும் 0771981879 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக, திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை முற்பகல் 8.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணி வரை தொடர்பு கொண்டு மருந்துப் பொதிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும், அவர் தெரிவித்தார்.
 
கிளினிக் இலக்கம், பெயர், விலாசம் மற்றும் தொலைபேசி இலக்கம் போன்றவற்றை அறியத்தருமாறும் அவர் கேட்டுள்ளார்.
 
(ஒலுவில் விசேட நிருபர் –எம்.எஸ்.எம்.ஹனீபா)
 
 

Add new comment

Or log in with...