திருநாவற்குளத்தில் வீதி புனரமைப்பு

வவுனியா, திருநாவற்குளத்தில் மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் அமைந்துள்ள மோசமான வீதிகள் நகரசபை உறுப்பினர் எஸ்.காண்டிபன் தலைமையில் நேற்று (19) செப்பனிடப்பட்டது.

வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் பல வீதிகள் மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் மோசமாக கணப்படுகின்றது. அவ்வீதிகளை வவுனியா நகரசபை உறுப்பினர் எஸ் காண்டீபன் நகரசபையின் அனுசரணையுடன் செப்பனிட்டு வருகிறார்.

அந்தவகையில் மோசமான வீதிகளுக்கு மக்கி பயன்படுத்தபட்டு வீதிகள் செப்பனிடப்படும் பணி நடைபெற்று வருகின்றது.

இது குறித்து கருத்து தெரிவித்த நகரசபை உறுப்பினர் எஸ்.காண்டீபன், வவுனியா நகரத்தை அண்டியுள்ள மிகப்பெரிய கிராமமான திருநாவற்குளம் அதிக அபிவிருத்தி பணிகள் தேவையுடைய ஒரு வட்டாரமாக காணப்படுகின்றது. அத்துடன் திருநாவற்குளத்தில் பல வீதிகள் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது. மழை காலமும் நெருங்கி வருவதால் போக்குவரத்து செய்ய மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் வீதிகள் செப்பனிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2022 இற்குள் திருநாவற்குளத்தில் சகல வீதிகளும் செப்பனிடப்பட்டு விடும் என தெரிவித்தார்.

(கோவில்குளம் குறூப் நிருபர்–காந்தன் குணா)

Add new comment

Or log in with...