ஊரடங்கு பகுதிகளில் நாளை மருந்தகங்கள், உணவு பொருள் விற்பனை நிலையங்கள் திறப்பு

ஊரடங்கு பகுதிகளில் நாளை மருந்தகங்கள், உணவு பொருள் விற்பனை நிலையங்கள் திறப்பு-Pharmacies-Essential Food Items-Shops-Open-at-Quarantine-Curfew-Area-8am-to-10pm

தற்பொழுது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்‌ அமுலில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும், உணவுப்‌ பொருட்கள் விற்பனை செய்யும்‌ வர்த்தக நிலையங்கள்‌ மற்றும்‌ மருந்தகங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளை (20) காலை 8.00 மணி தொடக்கம்‌ இரவு 10.00 மணி வரை குறித்த வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுக்கும்‌ தேசிய செயற்பாட்டு மையம்‌ இதனை அறிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 19 பொலிஸ் பிரிவுகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு, இறுதியாக கடந்த  16ஆம் திகதி குறித்த பகுதிகளில் மருந்தகங்கள், உணவுப் பொருள் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த பகுதியில் நேற்றையதினம் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 5 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதற்கமைய, கடந்த ஒக்டோபர் 04ஆம் திகதி முதல் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 302 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், ஊரடங்குச் சட்டத்தை மீறி பயணித்த முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட 53 வாகனங்கள் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

PDF File: 

Add new comment

Or log in with...