ட்ரம்ப், பைடன் தனித்தனியே தொலைக்காட்சியில் பிரசாரம் | தினகரன்


ட்ரம்ப், பைடன் தனித்தனியே தொலைக்காட்சியில் பிரசாரம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் அவரை எதிர்த்து போட்டியிடும் ஜோ பைடனும் இரண்டு வெவ்வேறு பிரசார ஒளிபரப்புகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.

என்.பி.சி தொலைக்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கு ட்ரம்ப்பும், ஏ.பி.சி. தொலைக்காட்சியில் ஒன்றரை மணிநேரத்துக்கு பைடனும் பிரசாரம் செய்யவுள்ளனர்.

வாக்காளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் இருவரும் பதிலளிப்பர்.

கருத்து கணிப்புகளில் பைடன் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் மூன்றாம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஆரம்பக்கட்ட வாக்களிப்பில் 14 மில்லியன் பேர் வாக்களித்துவிட்டனர். 8 வீத வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை.

அத்தகையோரின் மனத்தில் இடம்பிடிக்க, இரு வேட்பாளர்களும் கடுமையாக முயன்று வருகின்றனர்.


Add new comment

Or log in with...