உலக உணவுத் திட்டத்துக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டமை சிறப்பான அங்கீகாரம்

ரோம் - உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைதிக்கான நோபிள் பரிசு வழங்கப்பட்டமையானது ஒரு பணிவான, கனிவான அங்கீகாரமாகும். இது உலகம் முழுவதும் பட்டினியால் வாடும் 100 மில்லியன் குழந்தைகளுக்கு, பெண்களுக்கு மற்றும் ஆண்களுக்கு உணவு மற்றும் உதவிகளைக் கொண்டு வருவதற்காக ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் WFP ஊழியர்களின் பணியை அங்கீகரிக்கிறது என்று அமைதிக்கான நோபல் விருது வென்ற உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தின் (WFP) நிறைவேற்றுப் பணிப்பாளர் டேவிட் பீஸ்லியின் விடுத்துள்ள அறிக்ைகயில் தெரிவித்துள்ளார்.

உறுதியற்ற தன்மை, பாதுகாப்பின்மை மற்றும் மோதல்கள் காரணமாக பெரும்பாலான மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று உலகில் பசியுடன் வாழும் 690 மில்லியன் மக்களில் ஒவ்வொருவருக்கும் அமைதியாகவும் பசியின்றி வாழவும் உரிமை உண்டு. இன்று, நோர்வேயின் நோபல் குழு அவர்கள் மீதும், மோதலின் பேரழிவு விளைவுகளின் மீதும் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. காலநிலை அதிர்ச்சிகள் மற்றும் பொருளாதார அழுத்தங்கள் அவர்களின் அவல நிலையை மேலும் அதிகப்படுத்தியுள்ளன. இப்போது, பொருளாதாரம் மற்றும் சமூகங்கள் மீது அதன் மிருகத்தனமான தாக்கத்தைக் கொண்ட ஒரு உலகளாவிய தொற்றுநோய், மில்லியன் கணக்கானவர்களை பட்டினியின் விளிம்பிற்குத் தள்ளுகிறது.

அமைதிக்கான நோபல் விருது உலக உணவுத் திட்டத்திற்கானது மாத்திரம் அல்ல. அரசாங்கம், நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை கூட்டாளர்களுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றுகிறோம், பசி மற்றும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு உதவுவதில் எங்களுடைய ஆர்வத்திற்கு நிகரானதாக அவர்களது ஆர்வம் உள்ளது. அவர்கள் இல்லாமல் யாருக்கும் உதவ முடியாது. நாங்கள் ஒரு செயல்பாட்டு நிறுவனம் என்பதுடன், ஒவ்வொரு நாளும் எங்கள் ஊழியர்களின் அன்றாட வேலை எங்கள் ஒருமைப்பாடு, மனிதநேயம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றின் முக்கிய மதிப்புகளால் இயக்கப்படுகிறது.

மோதல் இருக்கும் இடத்தில் பசி இருக்கிறது. மேலும் பசி இருக்கும் இடத்தில் பெரும்பாலும் மோதல்கள் இருக்கும். உணவுப் பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை ஒன்றாகச் செல்கின்றன என்பதை இன்று இது நினைவூட்டுகிறது. அமைதி இல்லாமல், பசியின்மை என்ற உலகளாவிய இலக்கை எங்களால் அடைய முடியாது. பட்டினி இருக்கும் போது நமக்கு ஒருபோதும் அமைதியான உலகம் இருக்காது.

இலங்கையின் அறிக்கை:

உலக உணவுத் திட்டம் என்பது உலகின் மிகப் பெரிய மனிதாபிமான அமைப்பு. கடந்த ஆண்டு, இது 88 நாடுகளில் 97 மில்லியன் மக்களுக்கு உதவியது. அதன் மூன்றில் இரண்டு பங்கு பணிகள் மோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ளன. அங்கு மக்கள் மோதல்கள் இல்லாத நாடுகளில் வசிப்பவர்களை விட மூன்று மடங்கு ஊட்டச்சத்து குறைபாடு அதிகமுள்ளவர்களாக இருக்கிறார்கள். சிறுவர்கள் பட்டினியுடன் இருக்கும் போது நீடித்த அமைதி இருக்க முடியாது. நெருக்கடி காலங்களில் உயிர்களைக் காப்பாற்றுவதன் மூலமும், சமாதான காலங்களில் வாழ்க்கையை மாற்றுவதன் மூலமும், உலக உணவுத் திட்டம் மனிதகுலத்திற்கு விலைமதிப்பற்ற சேவையை வழங்கி வருகிறது.

உலக உணவுத் திட்டம் பட்டினியை எதிர்த்துப் போராடுவதற்கான அதன் முயற்சிகளுக்காகவும், மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதிக்கான நிலைமைகளை மேம்படுத்துவதில் அதன் பங்களிப்பிற்காகவும், யுத்தம் மற்றும் மோதல்களின் ஆயுதமாக பட்டினி பயன்படுத்தப்படுவதைத் தடுக்க ஒரு உந்து சக்தியாக செயல்பட்டதற்காகவும் அங்கீகரிக்கப்பட்டது' என்று நோர்வே நோபல் குழுவின் தலைவர் பெரிட் ரைஸ்- அன்டர்சன் கூறினார்.

கொவிட்-19 நெருக்கடி உலகளாவிய உணவுப் பாதுகாப்பின்மையை அதிகரித்துள்ளது, அதிகரித்த எண்ணிக்கையில் மக்கள் பட்டினியுடன் உள்ளனர். தொற்றுநோய், பொருளாதாரம் மற்றும் சமூகங்கள் மீது அதன் மிருகத்தனமான தாக்கத்துடன், உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பட்டினியின் விளிம்பிற்கு தள்ளுகிறது.

உலகளவில் மற்றும் இலங்கையில் அவசர உதவி, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு, மேம்பாட்டு உதவி மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் உலக உணவுத் திட்டம் கவனம் செலுத்துகிறது. இலங்கையில் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றவும், உணவு மற்றும் ஊட்டச்சத்திற்கு மக்கள் சிறந்த அணுகலை கொண்டிருப்பதனை உறுதி செய்வதற்காக ஆழ்ந்த மாற்றங்களைச் செய்யவும் இது அரசு மற்றும் பிற கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது.

'அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக, சுனாமி மற்றும் முரண்பாட்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் இருந்து உதவுதல் முதல், மாணவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க பாடசாலை உணவுகளை வழங்குவது வரை இலங்கையில் சமூகங்களுக்கு உதவுவதற்கு ஊழியர்கள் தம்மை அர்ப்பணித்துள்ளனர்' என இலங்கைக்கான உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் பிரென்டா பார்டன் தெரிவித்தார்.

'எல்லா இடங்களிலும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க அயராது உழைக்கும் இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள உலக உணவுத் திட்ட ஊழியர்களை அங்கீகரிப்பதற்காக இந்த விருதைப் பெற்றுள்ளமை தொடர்பில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் உலகின் மிகப் பெரிய மனிதாபிமான அமைப்பாகும், இது அவசர காலங்களில் உயிர்களைக் காப்பாற்றுகிறது, செழிப்பைக் கட்டியெழுப்புகிறது. அத்துடன் மோதல்கள், பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து மீண்டு வருபவர்களுக்கு நிலையான எதிர்காலத்தை ஆதரிக்கிறது.

மேலதிக தகவல்களுக்கு:
தான்யா ஜான்ஷ்,WFP,
தொ.பே. 0094 769 102462

Twitter, Facebook மற்றும் Instagram ShWFPSriLanka


Add new comment

Or log in with...