கொரோனா பாதுகாப்பு மருத்துவ உதவிகளை வழங்கியது அமெரிக்கா

கொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் பாதுகாப்பு அங்கிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களடங்கிய ஒருதொகுதி பொருட்களை அமெரிக்கா இலங்கைக்கு வழங்கியுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியிடம் அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) இவற்றைக் கையளித்துள்ளார்.

1,91,000 அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களே இவ்வாறு சுகாதார அமைச்சரிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இலங்கைக்கு இப் பாதுகாப்பு அங்கிகளின் பயன்பாடு மிகவும் முக்கியமானதாகக் காணப்படுமென அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் தனது பங்களிப்பை வழங்குமெனவும் அவர் கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...