பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நடித்து நாட்டின் பல்வேறு இடங்களில் வர்த்தகர்களிடம் பண மோசடி செய்து வந்த நபர் ஒருவரைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைத்தொலைபேசி சிம் அட்டை தொழில்நுட்ப தகவல்கள் மூலம் இச்சந்தேக நபர் நேற்று முன்தினம் எம்பிலிப்பிட்டிய வீதியில் ஹுங்கம பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி நபர் ரம்புக்கணை மொணராகலை, வலஸ்முல்ல, ஹுங்கம கெக்கிராவை, நொச்சியாகம போன்ற நாட்டின் பல்வேறு இடங்களில், அப்பிரதேசங்களின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எனத் தன்னை அடையாளம் காட்டி அப்பிரதேசத்தில் தனது வாகனம் பழுதடைந்ததாகக் கூறி அப்பிரதேச வர்த்தகர்களிடம் பணம் பெற்று மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
39 வயதான இந்நபர் கண்டி அங்கும்புர பிரதேசத்தை சேர்ந்தவர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இவர் மோசடியில் ஈடுபட்ட அவ்வப்பிரதேச பொலிஸ் நிலையங்களின் உதவியுடன், பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(இரத்தினபுரி சுழற்சி நிருபர் - பாயிஸ்)
Add new comment