ஊடகவியலாளர் ஜயசேகரவின் மூன்றாம் மாத நினைவு தினம்

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகையின் திருகோணமலை மாவட்ட முதலாவது நிருபரான கே.டீ. ஜயசேகர மரணமடைந்து 17 ஆம் திகதியன்று மூன்று மாதம் நிறைவடைகின்றது.

திருகோணமலை சென். ஜோசப் கல்லூரியில் ஆங்கில மொழியில் கல்வி கற்ற அவர் ரோயல் விமானப் படையிலும், ரோயல் கடற்படையிலும் பணிபுரிந்துள்ளார். பின்னர் அதிலிருந்து விலகி 1953 ஆம் ஆண்டு லேக்ஹவுஸ் நிறுவனத்தில் ‘சிலோன் டெய்லி நியூஸ்’ பத்திரிகையின் திருகோணமலை நிருபராக இணைந்தார்.

வெளிநாடுகளிலிருந்து முத்திரைகள் மற்றும் முதல்நாள் கடித உறைகளை தருவித்தார். நினைவு உறைகளை அச்சிட்ட அவர், முத்திரை கழகமொன்றை அமைத்து ‘சிலோன் பிலடெலிக்’ என்னும் பெயரில் முத்திரைகள் பற்றிய தகவல்கள் அடங்கிய சஞ்சிகையை அச்சிட்டு வெளிநாடுகளுக்கும் அனுப்ப நடவடிக்கை எடுத்தார்.

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் சிங்கள, தமிழ்மொழி மூல பத்திரிகைகளுக்கும் செய்திகளை அனுப்பிய அவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் திருகோணமலை மாவட்ட நிருபராகவும் இருந்தார். அதைத் தவிர ‘ரொயிட்டர்’, ‘பிரான்ஸ் புவத்’, ‘லங்கா புவத்’ போன்ற சர்வதேச ஊடகங்களுக்கும் ‘ஏசியா வீக்’ சஞ்சிகைக்கும் செய்திகளை வழங்கினார்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் காலமான பந்துவதி ஜயசேகரவின் கணவரான ஜயசேகர மூன்று புதல்விகளின் தந்தையாவார்.

மானேல் ஜயசேகர (வன பாதுகாப்புத் திணைக்களம்), தக்ஷிலா ஜயசேகர (லேக்ஹவுஸ் மாஞ்சு பத்திரிகையாசிரியர்), விசாகா ஜயசேகர (முன்னாள் ஊடகவியலாளர்), டொக்டர் உபுல் வாசல (மருமகன்), சந்தீப் வாசல (பேரன் – நாலந்தா கல்லூரி) ஆகியோர் அவர் நினைவாக அத்துருகிரிய, மில்லேனியம் சிட்டியில் அமைந்துள்ள வீட்டில் புண்ணிய நிகழ்வுகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்கள்.


Add new comment

Or log in with...