அக்கரைப்பற்றில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் | தினகரன்

அக்கரைப்பற்றில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நேற்று (14) காலை கல்முனை பிராந்திய சுகாதார சேவை பிரதிப்பணிப்பாளர் டொக்டர் ரி.எஸ்.ஆர்.ரி.ஆர்.றஜாப் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
 
பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சுகாதார பூச்சியியல் உத்தியோகத்தர்கள் குழுவாக வீடு வீடாகச் சென்று டெங்கு தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டியதுடன், டெங்கு பரவக்கூடிய இடங்களை அடையாளம் காட்டி எச்சரித்தும் உள்ளனர்.  துப்புரவு செய்வதற்கு ஆலோசனை வழங்கினர் அத்துடன் டெங்கு குடம்பிகள் காணப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
 
அதேவேளை டெங்கு நுளம்பு பெருகுவதை தடுக்கும் பொருட்டு, வெற்று காணிகளை வைத்திருப்போர்  மற்றும் டெங்கு உற்பத்திக்கு ஏற்ற சூழ்நிலையை வைத்திருப்பார் தமது காணிகளை துப்புரவு செய்ய வேண்டும் எனவும் தவறுபவர்களுக்க எதிராக நீதிமன்றத்தினுடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன்போது பல வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
 
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தையிட்டு சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் விஷேட வேலைத்திட்டத்துக்கு அமைய ஆரம்பமான இவ்வேலைத்திட்டத்தில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி பரூஸா நக்பர், உதவி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் காதர் உள்ளிட்ட சுகாதார உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.  
 
(அக்கரைப்பற்று மேற்கு தினகரன்  நிருபர் – எஸ்.ரீ. ஜமால்தீன்)
 

Add new comment

Or log in with...