Daraz இற்கு 4 வருட பூர்த்தி; இவ்வாரம் முழுவதும் விலைக் கழிவுகள் | தினகரன்

Daraz இற்கு 4 வருட பூர்த்தி; இவ்வாரம் முழுவதும் விலைக் கழிவுகள்

Daraz இற்கு 4 வருட பூர்த்தி; இவ்வாரம் முழுவதும் விலைக் கழிவுகள்-Daraz Turns 4-Happy Shopping

நான்கு வருடங்களில், சுமார் 35,000 விற்பனையாளர்களிடமிருந்து, இரண்டு மில்லியன் உற்பத்திகளை, ஒரு மில்லியன் பாவனையாளர்களுக்கும், 1.6 மில்லியன் பொதிகளை நாடளாவிய ரீதியிலும் விநியோகம் செய்தமை குதூகலமாகக் கொண்டாட வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும். அனைத்து ஒன்லைன் கொள்வனவாளர்களையும் இந்தக் கொண்டாடத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கும் வகையில் Daraz, ‘Daraz Turns 4’ என்ற ஐந்து நாள் ஒன்லைன் விற்பனை நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது. இதில் இலத்திரனியல் உபகரணங்கள், ஆடை அணிகள், நவ நாகரீக உற்பத்திகள், அத்தியாவசியப்  பொருட்கள் உட்பட மேலும் பல பொருட்களுக்கு 70% வரையான விலைக் கழிவுகள் பெற்றுக்கொடுக்கப்பட உள்ளது. 2020 ஒக்டோபர் 10 முதல் 15 ஆந் திகதி வரை இது இடம்பெறும்.

Daraz Mall நம்பகமான 100% உண்மையான வர்த்தகப் பெயர்களைக் கொண்ட 450 க்கும் மேற்பட்ட விற்பனை நிறுவனங்களுடன் செயற்படும் முன்னணி விற்பனைத் தளம், 14 நாட்கள் மீள் திரும்பல் கொள்கையுடன் இயங்கி வருகிறது. இதில் 40% விலைக் கழிவுகள் கொண்ட GoPro பொதிகள் கெமரா, மெமரி கார்ட், கெமரா பற்றரிகள் மற்றும் கெமரா தொகுதிகளுக்கு பெற்றுக்கொடுக்கப்படுகிறது. வன்டேஜ் மற்றும் லவீனா சாரிகள் என்ற வர்த்தகப் பெயரில் ரூபா 5,000 கொள்வனவுகளுக்கு ரூபா 25,000 பெறுமதியான பொருட்களை வெற்றி பெறும் வாய்ப்பு. கொக்கா கோலா, குழந்தைகளுக்கான தெரிவு செய்யப்பட்ட Diapers களை ஒன்லைன் மூலம் கொள்வனவு செய்யும் போது, அவற்றை ஒரு வருடம் முழுவதும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் வழங்க இந்த நிறுவனங்கள் தயாராக உள்ளன. நீங்கள் Daraz ஊடாக கொள்வனவு செய்யும் டெமாக் மோட்டார் சைக்கிள்களுக்கு ரூபா 6,500 விலைக் கழிவு கிடைக்கு;ம. அத்துடன். இலவச பதிவு வசதிகள் மற்றும் ஐந்து இலவச வாகன பராமரிப்பு சேவைகள் என்பனவற்றுடன் ஜர்கட் ஒன்றையும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். Daraz Easy Bills ஊடாக உங்கள் மின்சாரக் கட்டணங்களை 5% விலைக் கழிவுகளுடன் செலுத்தும் வாய்ப்பும் கிடைக்கிறது. (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

Daraz இன் ஒரு ரூபா விளையாட்டுக்களில் கலந்து கொண்டு, பல்வேறு உற்பத்திகளை வெறுமனே ஒரு ரூபாவுக்கு வெற்றி கொள்ளலாம். Mission 10 விளையாட்டில் 10 Missionகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் Samsung Galaxy Note 20 கையடக்கத் தொலைபேசி ஒன்றை வெற்றி கொள்ளும் வாய்ப்பையும், Daraz வவுச்சர்கள் மற்றும் பல்வேறு பரிசுகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் அது வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை வாடிக்கையாளர்கள் Daraz Cart இல் இணைத்துக்கொள்ள முடியும். அதில் வெற்றி பெறும் அதிஷ்டசாலிக்கு இலவசமாகப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பையும் வழங்கும். இதற்கு மேலதிகமாக, காலை 08.00 மணி முதல் காலை 10.00 மணி வரை ஊக்குவிப்புக் காலப்பகுதியில் பொருட்களை கொள்வனவு செய்வதன் மூலம் இலவசமாக Samsung Galaxy M31 கையடக்கத தொலைபேசி ஒன்றை வென்றிடும் வாய்ப்பையும் அது பெற்றுத் தருகிறது.

கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி, HSBC, HNB, செலான் வங்கி, னுகுஊஊ, ஸ்டான்டர்ட் சார்டட் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றின் கடன் அட்டைகள் மூலம் மேற்கொள்ளப்படும் கொள்வனவுகளுக்கு 10% விலைக் கழிவுகளையும், மாஸ்டர் காட்கள் மூலம் கொள்வனவு செய்யும் போது 12% விலைக் கழிவுகளையும் சகல கடன் மற்றும் வரவு அட்டைகளுக்கும் வழங்கப்படும். (நிபந்தனைகளுக்கு உட்பட்டது).

‘Daraz Turns 4’ இன் ஊடாக ஒரே தளத்தில் பல்வேறு வகையான வர்த்;தகப் பெயர்கள் கொண்டுவரப்பட இருக்கின்றன. இதில் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு பொருட்களையும் தெரிவுசெய்யக்கூடியதாக இருக்கும். இவற்றில் முக்கியமாக, முன்னணி வர்த்தகப் பெயர்களான சம்சுன், யுனிலீவர், பிறவுன் அன்ட் கம்பனி பிஎல்சி, ஹ{வாவே, வன்டேஜ் மற்றும் ரெக்கி பென்கிசர் ஆகிய முக்கிய நிறுவனங்கள் இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் அனுசரணை நிறுவனங்களாக செயற்படுகின்றன. இவ்வருடத்தின் வர்த்தகப் பெயர் பங்காளிகளாக Oppo, GoPro, லவீனா சாரி, லெனோவோ, அசூஸ், லக்சன டிரேட் சென்டர், மார்வெல், மூஸ் குளோத்திங், குவான்டம் பிட்னஸ், றீமெக்ஸ், றெவ்லொன், சிக்னேச்சர், டெக்ரூட், த கென்சப் ஸ்டோர், யமஹா மியூஸிக் சென்டர், அவிராட்டே, கொக்கா கோலா, டிக்கத்லன், EKEN, ஹோம்லக்ஸ் (பிரைவெட்) லிமிட்டெட, ஜெனட், க்ர்னோவா, LICC, மெலிபன், MammyPoco, TOFO, தொமோஹோவ்க் அன்ட் கென்ஸ்டார் பைக், டொயோட்டா லங்கா, யுனைட்டட் மோட்டர்ஸ் லங்கா பிஎல்சி, வைரஸ்டோ, ஆர்பிகோ, கேபல்ஸ் என் திங்ஸ் பை ஒன்ரென்ட், CELCIUS, ஹஸ்புரோ, லேலீஸ் மெட்ரெஸ், ஹேமாஸ், ஐரிஷ் காட்ன், IT கிளக்ஸ், லெக்ஸஸ் டிரேடிங் கம்பனி, MIIKA, நில்கின், சவி கெயார், SKMEI மற்றும் வீரெக் ஹோம் ஆகியன இணைந்து கொள்கின்றன. மேலதிக விபரங்களுக்கு Daraz Life இன் https://blog.daraz.lk என்ற இணைய தளத்தில் பிரவேசிக்கவும்.

பல்வேறு விதமான வர்த்தகக் குறிகள் மற்றும் பொருட்களைக் கொண்டு இயங்கும் இந்த விற்பனைத் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் Daraz இன் நான்காவது பிறந்த தினக்  கொண்டாட்டத்தில் இணைந்து கொள்ளலாம். https://bit.ly/3jqprbv என்ற இணைய தள முகவரியில் பிரவேசிப்பதன் ஊடாக Daraz இன் பிறந்த தினக் கொண்டாட்டத்துடன் இணைந்து கொள்ளுங்கள்.


Add new comment

Or log in with...