ரின் மீன், பெ. வெங்காயம், சீனி, பருப்புக்கு விலை குறைப்பு | தினகரன்

ரின் மீன், பெ. வெங்காயம், சீனி, பருப்புக்கு விலை குறைப்பு

ரின் மீன், பெ. வெங்காயம், சீனி, பருப்புக்கு விலை குறைப்பு-Dhal-Canned Fish-Sugar-Big Onion-Import Tax Reduced

இன்று முதல் ஒரு சில பொருட்களுக்கு இறக்குமதி வரி நீக்கம்

தகரத்திலடைத்த மீன், பெரிய வெங்காயம், சீனி, பருப்பு ஆகியவற்றின் விலைகள் உடன அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

தற்போதைய வாழ்க்கை செலவு மற்றும் கொவிட்-19 காரணமான சிரமங்களை கருத்திற் கொண்டு, அத்தியாவசிய பொருட்களான பருப்பு, தகரத்திலடைத்த மீன், வெங்காயம், சீனி ஆகியவற்றின் இறக்குமதி வரிகளை அரசாங்கம் நீக்கியுள்ளது.

வரிவிலக்கைத் தொடர்ந்து விலைகளில் மாற்றம்...

  • தகரத்திலடைக்கப்பட்ட மீன் (பெரியது) - ரூ. 200
  • ஒரு கிலோ பெரிய வெங்காயம் - ரூ. 100
  • ஒரு கிலோ சீனி - ரூ. 85

இவ்வத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட ரூபா 500 இற்கு மேல் மதிப்புள்ள பொருட்களை, சதொச நிறுவனத்தில் கொள்வனவு செய்யும் போது ஒரு கிலோ பருப்பின் விலை ரூ. 150 இற்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தெங்கு அபிவிருத்தி சபை, குருணாகல் பெருந்தோட்ட நிறுவனம், சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் ஆகியன தற்போது கொழும்பு நகரத்திற்கான தேங்காய் விநியோகத்தை அதிகரித்துள்ளன. எனவே, வாடிக்கையாளர்கள் சதொச விற்பனை நிலையங்களிலிருந்து நியாயமான விலையில் தேங்காய்களைப் பெற முடியும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...