சம்பிக்கவின் வழக்கு டிசம்பர் 11 இல் எடுக்கப்படும்

கடந்த 2016ஆம் ஆண்டு இராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக உள்ளிட்ட மூவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி  விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு, இன்று (12) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

விபத்திற்குள்ளான குறித்த ஜீப் வண்டியை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு, மின்சக்தி அமைச்சின் செயலாளருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி  உத்தரவிட்டுள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக, அவரது சாரதி, வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...