F17 Pro ஒன்லைன் மூலம் அறிமுகப்படுத்த தயாராகும் OPPO | தினகரன்

F17 Pro ஒன்லைன் மூலம் அறிமுகப்படுத்த தயாராகும் OPPO

F17 Pro கையடக்கத்தொலைபேசியை ஒன்லைன் மூலம் அறிமுகப்படுத்த தயாராகும் OPPO-OPPO F17 Pro Artist Thoughts

- பிரபல்யமான இளைஞர்கள், தொழில்நுட்ப முன்னோடிகள் பங்கேற்பு

OPPO இன் பிந்திய F தொடரான ஒக்டோபர் 13ஆம் திகதி மாலை 7 மணி முதல் வர்த்தக நாமத்தின் முகப்புத்தகத்தின் ஊடாக வெளியிடப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான தொழில்நுட்ப ஆர்வலர்கள், நடிகரும் பாடகருமான “தெவனி இனிமா” புகழ் ரவீன் கனிஷ்க, பிரபல தொலைக்காட்சித் தொடரான நீபா பபாலுவின் டனேஷா ஹதுருசிங்க மற்றும் பிரபல வலைப்பதிவாளர் அயேஷ் பெரேரா உள்ளிட்ட சுவாரஸ்யமான சமூக ஊடக நட்சத்திரங்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிகழ்ச்சியில் நடனப் புகழ் ரமோத் மலகா, ஆரோக்கியப் பயிற்சியாளரும் சமூக ஊடக ஆளுமையுமான ராண்டி செனவிரட்ன மற்றும் டெக்யூடியூப் உரிமையாளரும் தொழில்நுட்ப குருவுமான சனுக்ஸ்புரோ ஆகியோரும் கலந்துகொள்வர்.

இந்த நிகழ்விற்கான தயாரிப்பில், மேற்கூறிய அனைத்து பிரபலங்களும் தமது ரசிகர்களை சமூக வலைத்தளங்களின் ஊடாக வெளியீட்டில் பங்கெடுக்கச் செய்வர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதையிட்டு இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பதவிட்டதன் மூலம் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியிருந்த கனிஷ்க, இது ஒரு வகையான அனுபவமாகவிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது புதிய தயாரிப்பை ஆயிரக்கணக்கான பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது, “இந்தத் தொலைபேசி சிறந்த கமராத் தரம் மற்றும் நீண்ட பற்றரி ஆயுள் ஆகியவற்றைக் கொடுப்பதால் எனக்கு ஏற்றதாக இருக்கும் என நம்புகிறேன். நான் நிச்சயமாக இந்த நிகழ்வை எதிர்பார்த்திருக்கின்றேன்” என ரெமோன் நாளக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தன்னுடைய ‘நம்பகமான நண்பர்’ எப்படியிருப்பார் என்பதை எடுத்துக்காட்டுவது மற்றும் செல்பி எடுப்பதற்காக அமைக்கப்பட்ட அதிநவீன கமரா மூலம்; சிறந்ததை எப்போதும் வெளிப்படுத்த முடியும் என்பதால் புதிய தொலைபேசியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன் என நடிகை தனஷா ஹத்துருசிங்க தெரிவித்தார். “நிச்சயமாக எனது புதிய தொலைபேசியைப் பயன்படுத்தி இன்டர்கிராமில் பதிவேற்றுவதற்கு சிறந்த வாழ்க்கைப் படங்களை பதிவுசெய்ய முடியும் என நான் கருதுகின்றேன். இது 500,000ற்கும் அதிகமான பின்தொடர்னர்களைக் கொடுக்கும் என எதிர்பார்க்கின்றேன்” என தனஷ தெரிவித்துள்ளார்.

எனது செயற்பாடுகள் மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் நான் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கும் பொருந்துவதாக F17  புதிய கையடக்கத் தொலைபேசி இருக்கும் என மற்றுமொரு பிரபல நடிகையும், சமூக ஊடக செல்வாக்குச் செலுத்துனருமான ஷெஹானி கஹந்தவல தெரிவித்துள்ளார். தொலைபேசி தனது வாழ்க்கை முறையுடன் மிகவும் இணக்கமாக இருப்பதாக உடற்பயிற்சியாளரும், பயணப் பதிவாளருமான ரன்டி மற்றும் அயேஷ் ஆகியோர் தெரிவித்தனர். நான் எப்போதுமே பயணத்தில் இருப்பதால், பல கருவிகளைச் சுமத்து செல்லவேண்டிய தேவையை இத்தொலைபேசி நீக்குகிறது. OPPO F17 Pro இணையற்ற பற்றரி ஆயுளைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், விதிவிலக்கான தரத்தில் படங்களையும் எடுக்க முடியும். இதனூடாக வனவிலங்குகளைப் பார்வையிடும் பயணம் சுவாரஷ்யமாக இருக்கும் என அயேஷ் தெரிவித்தார்.

“ஆரம்பத்தில் இருந்தே, OPPO வர்த்தகநாமம் கையடக்கத்தொலைபேசித் தொழில்நுட்பம் மற்றும் கையடக்கத்தொலைபேசி புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றில் பெரும் முன்னேற்றத்துடன் உலகளவில் இளைஞர்களின் இதயங்களை ஈர்த்துள்ளது. OPPO F17 ஐ அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என இலங்கையின் தொழில்நுட்ப சகோதரத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சனுக்ஸ் தெரிவித்தார்.

OPPO பற்றி
OPPO உலகில் வேகமாக வியாபித்து வரும் ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமாகும். 'Smiley Face' ஐ 2008ஆம் அறிமுகப்படுத்தியதிலிருந்து OPPO அழகியல் திருப்தி மற்றும் புதுமையான தொழில்நுட்பத்தினை இடைவிடாது தொடர்கிறது, இன்று வாடிக்கையாளர்களுக்கான கண்டுபிடிப்பு, Find and R தொடர்கள், ColorOS இயங்குதளம் மற்றும் OPPO கிளவுட், OPPO+ போன்ற இணைய சேவைகளால் முன்னெடுக்கப்பட்ட பரந்த அளவிலான ஸ்மார்ட் சாதனங்களை வழங்குகிறது. OPPO 40ற்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தனது செயற்பாடுகளைக் கொண்டிருப்பதுடன், உலகளவில் 6 ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 4 R&D மையங்கள் மற்றும் லண்டனில் சர்வதேச வடிவமைப்பு மையம் ஆகியவற்றுடுன் OPPO இன் 40,000ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாழ்க்கையை உருவாக்க அர்ப்பணித்துள்ளனர். 


Add new comment

Or log in with...