போக்குவரத்து திணைக்கள சேவைகள் இடம்பெறாது

போக்குவரத்து திணைக்கள சேவைகள் இடம்பெறாது-Department of Motor Traffic Closed-Oct 12-16

எதிர்வரும் வாரம் (ஒக்டோபர் 12 - 16) போக்குவரத்துத் திணைக்களத்தின் பொதுமக்களுக்கான சேவைகள் இடம்பெறமாட்டாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் சீ.கே. அளககோன் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள கொவிட்-19 பரவல் நிலையை கருத்திற்கொண்டு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நாராஹேன்பிட்டி மற்றும் மற்றும் வேரஹெரவிலுள்ள அதன் அலுவலகங்களில் பொதுமக்கள் சேவைகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் வாகன அனுமதிப்பத்திர புதுப்பித்தல் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த காலப் பகுதியில் காலாவதியாகும் வாகன அனுமதிப்பத்திரங்களை மீள் புதுப்பிக்கும்போது, அதற்கென அபராதத் தொகை விதிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது நிலவும் கொவிட்-19 பரவல் நிலையைக் கருதிற்கொண்டு, குடிவரவு - குடியகல்வு திணைக்களம் மற்றும் ஆட்பதிவுத் திணைக்கள பொதுமக்கள் சேவைகள், எதிர்வரும் வாரம் இடம்பெறாது என ஏற்கனவே அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...