ரியாஜ் பதியுதீனின் விடுதலை; எதிராக 100 எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் | தினகரன்

ரியாஜ் பதியுதீனின் விடுதலை; எதிராக 100 எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

ரியாஜ் பதியுதீனின் விடுதலை; எதிராக 100 எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு கடிதம்-A Group of 100 MPs Signed a Letter to Probe In to Release of Riayj Bathiudeen

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர், ரியாஜ் பதியுதீன் CID யினரால் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் 100 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதமொன்று, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு (2019 ஏப்ரல் 21) தாக்குதல்கள் தொடர்பில், அத்தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்கு உதவியாக செயற்பட்ட சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன், கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி கைது செய்யப்பட்டதோடு, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...