Tuesday, October 6, 2020 - 1:13pm
மட்டக்களப்பு மாவட்ட, பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான எஸ். வியாழேந்திரன், பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு வர்த்தக பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஏற்கனவே, சதாசிவம் வியாழேந்திரன், தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக, தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment