சர்வதேச நீதி கோரி நேற்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

'எமக்கான நீதியை நாம் பெற ஏதுவாக இலங்கையை சர்வதேச நீதிமன்றிற்கு பாரப்படுத்து' வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

இன்று (01) சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் காணாமல் போன தமது குழந்தைகளுக்கு நீதி கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (30) காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.

தமிழ் குழந்தைகள் என்ன பயங்கரவாதிகளா?, 'எங்கள் உறவுக்காக நீதி சர்வதேச நீதியாகவே வழங்கப்பட வேண்டும், இலங்கையில் போர்க்குற்றம் செய்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்துங்கள், சின்னஞ்சிறு சிறார்கள் என்ன ஆயுதம் ஏந்தியவர்களா?, பாடசாலை சென்ற மாணவன் எங்கே?' போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கவனயீர்ப்பு போராட்டம் சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்றிருந்ததுடன் போராட்டத்தில் 30க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்


Add new comment

Or log in with...