தோட்டத் தொழிலாளருக்கு ஆயிரம் ரூபா சம்பளம் | தினகரன்

தோட்டத் தொழிலாளருக்கு ஆயிரம் ரூபா சம்பளம்

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அறிவிப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதற்கான அறிவிப்பை பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கி இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ  தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று (29) நடைபெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர், தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது நானே பிரதமர், எனவே பேச்சுவார்த்தை ஊடாக அதற்கான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதென தெரிவித்தார்.

 

கே. அசோக்குமார்


Add new comment

Or log in with...